ஆக்ரா:ஆக்ராவில் உள்ள ஜெய் மருத்துவமனையில் நேற்று மாலை 5.45 மணியளவில் மருத்துவ மனையின் வரவேற்பறையில் திடீர் என்று குண்டு வெடித்ததை தொடர்ந்து அங்குபரபரப்பு நிலவியது. மருத்துவ மனையின் வரவேற்பறையில் 15 நோயாளிகள் இரும்பு நாற்காலியில் அமர்ந்து இருந்த வேளையில் ஒரு நாற்காலியின் கீழ் பகுதியில் இருந்து இந்த குண்டு வெடித்ததாக தெரிகிறது.
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஒன்றும் எற்படவில்லை என்றாலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர், அவர்களுக்கு உடனடியாக அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மின்கலம் மற்றும் கம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்க்கான முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆக்ராவை சேர்ந்த பொதுத்துறை காவல் அதிகாரி பி.கே.திவாரி தெரிவிக்கும்போது; முதல் கட்டவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், காயம் அடைந்தவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைப்பற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர், இந்த சம்பவத்தை பற்றிய செய்திகள் சேகரிக்கப்படுகிறது என்றும், விரைவில் தேசிய பாதுகாப்பு அமைப்பு சம்பவ இடத்தை அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபமாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் காரணங்களை கண்டறியும் முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment