துபை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்டிற்கு உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபையில் உள்ள பூர்ஜ்கலிபா கட்டடத்தில் ஏற நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் அலையன் ராபர்ட்.
இவர் அந்நாட்டின் ஸ்பைட்மேன் எனஅழைக்கப்படுகிறது. இவர் அந்நாட்டின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள இரட்டை கோபுரம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் உள்ள கட்டடம் ஆகிய மிகவும் உயரமாக கட்டடங்களில் எந்தவித உபகரணங்களும் இன்றி ஏறி சாதனை படைத்தார். இந்நிலையில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான துபையில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான சாதனையை வரும் மார்ச் 28-ம் தேதி மேற்கொள்ளவுள்ளார். பூர்ஜ்கலிபா கட்டடம் 800 மீட்டர் (2625 அடிஉயரம் ) கொண்டது. 160 மாடிகளை கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரியில் தான் கட்டி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் ஏறி சாதனை படைக்க ராபர்ட் விரும்பினார். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே கட்டடத்தின் மீது ஏற துபை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 28-ம் தேதி ராபர்ட் இச்சாதனையை நிகழ்த்தவுள்ளார். மொத்தம் 7 மணி நேரத்திற்குள் கட்டடத்தின் உச்சியினை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளார்.
source: dinamalar

No comments:
Post a Comment