காட்டுமன்னார்கோவில் : கோடை காலம் துவங்கும் முன்பே, வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
சென்னைக்கு தினமும் 72 கன அடி தண்ணீர் செல்கிறது. கடந்தாண்டு பருவமழை தாமதமானதால், மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி தாமதமானது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கடும் மழையால் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் வீராணம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கீழணையில் இருந்து வீராணத்திற்கு வந்த தண்ணீர், கொள்ளிடம் வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டது. வெள்ளம் வடிந்த பின், கீழணையில் இருந்து வீராணத்திற்கு தினமும் 600 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஒரு மாதத்திற்கு முன் கீழணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், வீராணத்திற்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரியின் மொத்த தண்ணீர் அள வான, 1,465 மில்லியன் கன அடிக்கு 150 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடல் போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது குட்டை போல் காட்சி அளிக்கிறது. தினமும் 72 கன அடி நீர் சென்னைக்கு சென்ற நிலையில், தற்போது ஏரியில் நீர் இருப்பு குறைந்துள்ளதால், 40 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. அதுவும் இன்னும் 10 நாட் களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்பதால், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment