Islamic Widget

February 20, 2011

நல்லா கௌப்புனாங்க பீதிய...!

நேற்று இரவு 8 மணி முதல் பரங்கிப்பேட்டை முழுதும் பரபரப்பான செய்தி பரவ, அனைவரும் வானத்தை நோக்கி முழுநிலவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர், 'அட! ஆமாங்க, தெரியுதுங்க!' என்கின்றனர். சிலர், 'எனக்கு ஒன்னுமே தெரியலயே...!' என்கிறன்றனர். 'அட நல்லா உத்து பாருங்க... கிளியரா தெரியுது' என்று வேறு சிலர்.ஆண்களைவிட பெண்கள் முந்திக்கொண்டு, வீட்டு வாசல்களுக்கும் - மொட்டை மாடிக்கும் சென்று நிலாவுக்கு செல்லாமலேயே தங்கள் ஆராய்ச்சியை துவங்கிவிட்டனர்.
அவர்கள் நோக்கும் விசயம் தெரிகிறதோ இல்லையோ செய்தி மட்டும் மொபைல் போன் மூலமாக காட்டுத்தீ போல பரவுகிறது. இரவு 10 மணியை கடந்தும் சுமார் 11 மணிவரை இந்த நிலாவில் படம் பார்க்கும் படலம் நீடித்தது.அப்படி என்னதான் என்று கேட்கின்றீர்களா? ஒன்னுமில்ல! 'இத்தனை காலமாக நிலாவில் பாட்டி வடை சுட்ட விசயத்தை விட்டு விட்டு நேற்று அந்த நிலாவில் அல்லாஹ்வின் பெயர் தெரிகிறது என்று யாரோ ஒரு வதந்தியை பரப்பி, பீதிய கௌப்பிட்டாங்க!

நன்றி:mypno

No comments:

Post a Comment