Islamic Widget

January 31, 2011

கேஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது'

கேஸ் சிலிண்டர்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் பொதுமக்கள் குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி சி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலர் கேஸ் சிலிண்டர் உபயோகிப்போர் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவிஆட்சியர் எம்.இந்துமதி முன்னிலை வகித்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம், சிதம்பரம் குடிமைப்பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ரா.பாண்டுரங்கன், தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு, நுகர்வோர் உரிமை மற்றும் சூற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை நிர்வாகி கோ.தமிழரசன், சிதம்பரம் தாலுக்கா நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.நுகர்வோர் குழுமச் செயலர் சி.டி.அப்பாவு பேசியது: ஒரு கேஸ் சிலிண்டருக்கு ஆயில் நிறுவனம் நிர்ணயம் செய்த தொகை ரூ.357.50 பைசா. இதில் சப்ளை செய்வதற்கான தொகை ரூ.8-ம் அதில் அடங்கும்.
ஆனால் ஒரு சிலிண்டருக்கு ரூ.380 வசூலிக்கப்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஒரு ரேஷன் கார்டுதாரருககு 12 சிலிண்டர் வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
ஆனால் தற்போது ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு 21 நாள்கள் கழித்துதான் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்படுவதால் அடுத்த சிலிண்டர் பெற சுமார் 40 நாள்கள் ஆகிறது.எனவே தட்டுபாடின்றி சிலிண்டர் வழங்க வேண்டும் என அப்பாவு தெரிவித்தார். நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலர் கோ.தமிழரசன் பேசுகையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 வசூலிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி.ராஜேந்திரன் பதில் தெரிவிக்கையில், கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் அது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கூடுதல் சப்ளை பெற்று தட்டுபாடின்றி சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Source:dinamani photos:pno.news

No comments:

Post a Comment