Islamic Widget

January 14, 2013

தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

சாதி வேறுபாடுகளை மறந்து கொண்டாடுவோம் - தலைவர்கள் பொங்கல் வாழ்த்து! சென்னை: பொங்கல் திருநாளை ஒட்டி தலைவர்கள் தங்களது பொங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்:சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்." என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி:

காவிரி நீர் கிடைக்காமலும், பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமலும் தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளனர் என்றும் புலரும் புத்தாண்டு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற அடிப்படையில், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

காரிருளுக்குப் பிறகு வெளிச்சம் உதிக்கும் என்ற நியதின் படி தை பிறந்து விட்டது என்றும், இனியாவது நமக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெருமக்கள் இப்பொங்கலை கொண்டாடட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. How to Make Money with Bet365 - What is it & Can I Use it to Make
    Bet365 Bonus Code 2021 — หาเงินออนไลน์ A Bet365 bonus code is a no deposit offer for new customers, This is an easy way for you to make money from betting on horse races

    ReplyDelete