Islamic Widget

February 20, 2011

டாஸ்மாக் கடை இடம் மாற்ற கோரிக்கை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையை இடம் மாற்ற ஆர்.டி.ஓ.,வுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பு.முட்லூர் ஊராட்சி துணைத் தலைவர் முத்துவேல் கொடுத்துள்ள கோரிக்கை மனு: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகிலேயே பஸ் நிறுத்தம் உள்ளதால் பு.முட்லூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பஸ் ஏற வருகின்றனர். குடிபிரியர்கள் அந்த பகுதியில் பஸ்சுக்காக நிற்பவர்களிடம் தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்கின்றனர்.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், அரசு அலுவலகங்கள், கோவில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். அதனால் டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment