நாக்பூர்:ஊழல் வழக்கில் முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கைது செய்யப்பட்டது கட்சி தலைமைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகைய ‘சிறிய தவறுகளை(?)’ குறித்து எடியூரப்பாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்- என்று அத்வானி கூறுகிறார்.
எடியூரப்பா கைதுத் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பதில் அளித்த அத்வானி சுரஙகத் தொழில் ஊழலில் எடியூரப்பாவின் பெயரை விமர்சிக்காமலிருப்பதில் கவனம் செலுத்தினார்.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர பா.ஜ.க தலைமை வகித்த என்.டி.எ அரசு என்ன செய்தது? என்ற கேள்விக்கும் அத்வானி தெளிவான பதிலை கூறவில்லை. அவ்வேளையில் வெளிநாட்டு சட்டங்கள் கடுமையாக இருந்ததாகவும், சுவிஸ் வங்கி விபரங்களை அளிக்க மறுத்துவிட்டதாகவும் மழுப்பலான பதிலை கூறினார்.
No comments:
Post a Comment