சிதம்பரம் : சிதம்பரம் புறவழிச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் சட்டசபையில் கோரிக்கை வைத்தார். சட்டசபை கூட்டத் தொடரில் அவர் பேசியதாவது: சிதம்பரம் அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கோரிக்கை வைத்து வருகிறேன்.
அதேப்போன்று சிதம்பரம் புறவழிச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசினார். ரவுண்டானா அமைப்பது குறித்து அரசு பரிசீலித்துக் கொண்டிருப்பதாகவும், புறவழிச்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பதில் கூறினார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment