காட்டுமன்னார்கோவில் : லால்பேட்டை அரசு பள்ளி வளாகத் திலேயே பெண்கள் பள்ளியை துவங்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முகமது அய்யூப் தலைமை தாங்கினார்.
நகர தலைவர் முகமது ஹாரிஸ் வரவேற்றார். பொருளாளர் இர்பானுல்லா, யாசர் அராபத், அமானுல்லா, அப்துல் சமது, முஹம்மது ஆஷிக் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலர் ரிக்பாய், நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா, துணை செயலர் ஜின்னா, மாவட்ட தலைவர் மெஹராஜ்தீன் பங்கேற்று பேசினர். அஹம்மது ஆஷிக் நூர் நன்றி கூறினார். கூட்டத்தில் லால்பேட்டை அரசு பள்ளியை இரண்டாக பிரித்து அதே வளாகத்தில் பெண்களுக்காக மேல்நிலை பள்ளியை வரும் கல்வி ஆண்டு முதல் துவங்க வேண்டும். வாக்காளர் திருத்தம் செய்யும் பணியாளர்கள் இல்லாததால் மக்கள் அவதியடைகின்றனர். அரசே நேரடி முகாம் போட்டு வாக்காளர் பெயர் திருத்தம் செய்ய வேண்டும். லால்பேட்டை - மானியம் ஆடூர் இணைப்பு சாலையை உடனடியாக சீர் செய்ய வேண்டும். உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது.
Source: Dinamalar

No comments:
Post a Comment