பரங்கிப்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.அவர் வரதட்சணை கொடுமை யால் இறந்தாரா? என்று சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்து மதி நேரில் விசா ரணை நடத்தினார்.
தகராறு
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேட்டான்.இவரது மகன் முரளிதரன் (வயது 29).மீனவர்.இவருக்கும் கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு ராமநாத நகரை சேர்ந்த பரமசிவம் மகள் வாணி (22) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி 2 பேரும் புதுக்குப்பத்தில் வாழ்ந்து வந் தனர்.ஆனால் குழந்தை இல்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முரளி தரனுக்கும், வாணிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.இதில் ஒருவரை யொருவர் கடுமையான வார்த் தைகளால் திட்டிக் கொண் டனர்.
தூக்கில் பிணம்
அதன்பிறகு முரளிதரன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் சிறிது நேரம் கழித்து முரளிதரன் வீட்டுக்கு சென்றார்.அங்கே வாணி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங் கினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளிதரன் மற்றும் அவரது உறவினர்கள் இது பற்றி வாணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவம் கேள்விப்பட்டதும் வாணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந் தனர்.அங்கே வாணி இறந்து கிடந் ததை பார்த்து கதறி அழு தனர்.அதையடுத்து வாணி யின் தாய் ராணி பரங்கிப் பேட்டை போலீசில் புகார் செய்தார்.அதில், தனது மகள் வாணியிடம் கூடுதலாக வர தட்சணை நகை, பணம் கேட்டு கொடுமைப்படுத்தி கொன்று விட்டனர்.எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது.ஆகவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
சந்தேக மரணம்
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார ராஜா, கண்ணன், ஏட்டுகள் வெங்கடேசன், விஜயகுமார் ஆகியோர் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.மேலும் வாணிக்கு திருமணமாகி 1 ஆண்டே ஆவ தால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
source: dailythanthi
No comments:
Post a Comment