Islamic Widget

February 15, 2011

"ஏர்ஹாரன்' பயன்படுத்தும் வாகனங்களால் தலைவலி : ஒலி அளவை குறைக்க நிரந்தர தீர்வு தேவை

பஸ் உள்ளிட்ட வாகனங்களில் விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது, திருவிழா காலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் சத்தமாக பாடல்கள் ஒலிபரப்புவது, காதைக் கிழிக்கும் பட்டாசு” வெடித்தல் என நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக சராசரி மனிதனின் கேட்கும் திறன் ஒலி அளவு 80 டெசிபல் ஆகும். அதற்கு மேல் அதிகரித்தால் அது ஆபத்து என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
பகல் நேரத்தில் ஒலியின் அளவு 53 டெசிபலும், இரவில் 35 டெசிபலும் இருந்தாலே போதுமானதும் பாதுகாப்பானதுமாகும். வாகனங்களுக்கு 90 டெசிபல் இருக்க வேண்டும். 90 டெசிபலுக்கு மேல் அதிக ஒலியை ஒருவர் எட்டு மணி நேரத்திற்கு கேட்டால் அவருக்கு காது கேளாமை ஏற்படும். இரவு நேரங்களில் 35 டெசிபலுக்கு மேல் ஒலியை கேட்டால் உறக்கம் இல்லாமை ஏற்பட்டு உடல் நலமும், மன நலமும் பாதிக்கும். இதனால் வேலை திறன் பாதித்து, செயல் திறனும் குறைந்து விடுவதோடு எரிச்சல், கோபம், மன அழுத்தம், தூக்கக் கேடு முதலியவை உண்டாகிறது. கருவுற்றிருக்கும் பெண்களின் சிசுவின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சிசு உருச்சிதைவு ஏற்படும் நிலையும் உருவாகலாம்.சத்தத்தால் இவ்வளவு அபாயம் இருக்கிறது என்பதை உணராமல் மோட்டார் சைக்கிளிலிருந்து பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் காதைக் கிழிக்கும் அளவிற்கு ஏர் ஹாரன் மூலம் ஒலி எழுப்புகின்றனர். அதுமட்டுமின்றி கோவில் திருவிழாக்கள், திருமணம், அரசியல் கூட்டங்கள் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நகரம் முதல் கிராமம் தோறும் ஒலிப் பெருக்கியும், பெரிய வெடிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். நகர பகுதிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறைந்தாலும், இரவு, பகல் பாராமல் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாடிக் கொண்டிருக்கும் பாக்ஸ் ஒலிப்பெருக்கிகள், காதை கிழிக்கக் கூடிய அளவிற்கு அதிக சத்தம் கொண்ட வெடிகள் வெடிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஒலியால் மனிதர்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1986 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரவு 10 மணியில் இருந்து காலை ஆறு மணி வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் அதிக சப்த வெடிகளும் எங்கும் வெடிக்க கூடாது. ஆனால் இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. மாசு” கட்டுப்பாட்டுத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு பஸ் அதிபர்கள், சவுண்டு சர்வீஸ் உரிமையாளர்கள் மற்றும் பட்டா” உற்பத்தியாளர்களை அழைத்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
Source: Dinamalar photos:pno.news

1 comment:

  1. திருத்தலாமே.
    பட்டா - பட்டாசு, மா"கட்டுப்பாட்டு, மாசு கட்டுப்பாட்டு

    ReplyDelete