விசுவ இந்து தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மே.மாம்பலம் இந்து வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர், ’’ஸ்பெக்ட்ரம் அலை கற்றை பங்குகள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட டெலிபோன் கம்பெனிக்கு விற்கப்பட்டது தவறு. அந்த கம்பெனி சீனாவிலுள்ள வேறொரு கம்பெனியுடன் தொடர்புடையது. பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதால் இந்தியாவில் யார் செல்போனில் பேசினாலும் அதை பாகிஸ்தான் டெலிபோன் கம்பெனியால் ஒட்டுக் கேட்கமுடியும். இதனால் இந்தியாவுக்கு ஆபத்து. (சுப்ரமணிய சுவாமியை அவரது அரசியல் எதிரிகள் CIA உளவாளி, சீன உளவாளி என்றெல்லாம் அடிக்கடி குற்றஞ்சாட்டுவர்)
இந்து எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து ஊடகங்கள் விடுதலை பெறவேண்டும். ஊடகங்கள் பெரிய தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மீற முடியாமல் உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதே இந்துக்களின் நோக்கம். ராம ஜென்ம பூமி அருகே எந்த மசூதியும் கட்ட விடமாட்டோம். இந்துத்துவால் தான் ஊழலை ஒழிக்க முடியும்’’ என்று பேசினார்
Source:.inneram
No comments:
Post a Comment