சேத்தியாத்தோப்பு : வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப் படுத்திய கணவன் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் கொடிக் கால் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் வெங்கடேசன் (55). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார்.
இவருக்கும் மங்களூரை சேர்ந்த தனபால் மகள் தனலட்சுமிக்கும் 10 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். டிரைவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டாக மனைவி தனலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதுபற்றி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, தனலட்சுமியை கொடுமைப்படுத்திய அவரது கணவர் வெங்கடேசன், மாமனார் தண்டபாணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாமியார் வைஜயந்திமாலா உட்பட 9 பேரை தேடி வருகின்றனர்.
November 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- பரங்கிபேட்டையில் விடிய விடிய மழை
No comments:
Post a Comment