பரங்கிப்பேட்டை நவ.1: பரங்கிப்பேட்டையில் இன்று (1ந் தேதி) முதல் 2 மணி நேர மின்சார நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சிதம்பரத்தில் தினமும் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யும் நேரம் இன்று (1ந் தேதி) முதல் மாற்றியமைக்கப்படுகிறது. சிதம்பரம் துணைமின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் நடராஜா பீடர் பகுதிகளான மேலவீதி, வடக்குவீதி, 16கால் மண்டபத் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், டூரிஸம் பீடர் மூலம் மின் சப்ளை பெறும் ரயில்வே பீடர் ரோடு, பஸ் நிலையம், எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10.00 முதல் 12.00 மணி வரையிலும், அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும், அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும்,
காட்டுமன்னார்கோயில் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்,
பு.முட்லூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை பெறும் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரையிலும், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 12.00 மணி முதல் 2.00 மணிவரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Source: Dinakaran
November 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை
- சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அதிகாரிகளை தாக்கிய இளம்பெண்
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
- உணவுப் பணவீக்கம் 17.05 சதவீதமாக உயர்ந்தது
- புவனகிரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க மும்முனை போட்டி
- நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
இன்று காலையிலேயே மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்?
ReplyDeleteநீங்கள் சிதம்பரம் மின்வாரியதை தான் கேக்கவேண்டும்
ReplyDelete