Islamic Widget

October 25, 2010

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக மிகுந்த பதட்டமும் கடும் கிளர்ச்சியும் நடைபெற்று வருவது அறிந்ததே. இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்தளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி,


"அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த மாதம் இந்தியா வருகையின் போது, காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு இருநாடுகளுக்கு இடையிலும் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தாரல்லவா,

அதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் க்ரொவ்ளி ":இவ்விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலானது. அவர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியது. காஷ்மீர் நிலவரம் கவலைக்கிடமாகவே இருக்கிறது. இதுகுறித்து இருநாடுகளிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் அங்கு பிரசினை தீர்க்கப்பட வேண்டும் என, விரும்புகிறோம். அங்கு அளவுக்கு மீறிய பதட்டமும், கலவரமும் நடந்து வருவதால் தான் பேச்சுவார்த்தை மூலமாக இருநாடுகளும் பிரசினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் அமெரிக்கா தெளிவான கொள்கையுடன் இருக்கிறது.பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவால் இந்தியாவுக்கோ, இந்தியா உடனான அமெரிக்க உறவால் பாகிஸ்தானுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்று கிரவ்ளி கூறியுள்ளார்


Source: inneram.com

No comments:

Post a Comment