Islamic Widget

October 25, 2010

40 லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கடலூர் : கடலூரில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஸீ40 லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(40). மீனவர் விடுதலை வேங்கை கட்சியின்  மாநில துணை பொதுச் செயலாளர். நேற்று முன்தினம் மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டார்.



இது குறித்து   மாரியப்பன் நண்பர் ஆராமுதன் கொடுத்த புகாரின் பேரில் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவனாம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் கடலூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஞானசேகரன்(25), முத்து(38), வீரமணி(39), புலியேந்திரன்(30), கார்த்திக்(26), வேலு(31), தென்னரசு(26), ராஜசேகரன்(29), உதயவாணன்(26) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சரவணனுக்கு சொந்தமான ஸீ35 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கடலூர் துறைமுகம் அருகே மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்த விபத்தில் ஐயனார் என்பவர் விசைப்படகும் சேதமடைந்தது. சுமார் ஸீ40 லட்சம் அளவிற்கு படகுகள், வலைகள் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீனவர் மாரியப்பன் கொலைசம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக படகு எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  மீனவர்கள் பலர் தங்கள் வலைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றிச்சென்றனர். படகுகள் எரிப்பை  தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரை கிராமங்களான தாழங்குடா, சின்னப்பட்டினம், அக்கரைகோரி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மாரியப்பன் உடல் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Source: dinakaran

No comments:

Post a Comment