Islamic Widget

October 17, 2010

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போட கோரிக்கை

சிதம்பரம் : அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிதம்பரம் அக்னி சிறகுகள் எழுச்சி இயக் கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது. இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் குபேரன், தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த சில மாதங் களாக பன்றிக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் அரசு இலவசமாக தடுப் பூசி போடப்படும் என அறிவித் துள் ளது. அனைவருக்கும் இலவச "டிவி', காஸ் அடுப்பு வழங்கிவரும் முதல்வர் நோய்தடுப்பு மருந்தையும் அனைவருக்கும் இலவசமாக போட அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Source:  Dinamalar

No comments:

Post a Comment