Islamic Widget

August 08, 2010

கடலூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு

கடலூர் மாவட்டத்தில் முத்திரைத் தாள்களுக்கு (பத்திரங்கள்) தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு முத்திரைத் தாள்கள், மாவட்டக் கரூவூலத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களாக முத்திரைத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக ரூ.1000, ரூ.500, ரூ.100 ரூ.50 மதிப்பிலான முத்திரைத் தாள்கள் கிடைப்பது இல்லை என்றும், ரூ.10 மதிப்பிலான பத்திரங்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவு பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரூ.10 மதிப்புள்ள பத்திரத்தில் சொத்து பரிவர்த்தனைகளை எழுதி, மீதித் தொகைக்கு வங்கி வரைவோலை வாங்கியாக வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனால் பத்திரங்கள் பதிவு செய்ய, பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாகவும் பத்திர எழுத்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்டக் கருவூல அலுவலர் எம்பெருமாளிடம் கேட்டதற்கு, கடலூர் மாவட்டக் கருவூலத்துக்கு முத்திரைத் தாள்கள் நாசிக்கில் இருந்து வருகின்றன. நாசிக்கில் அச்சிட்டு முத்திரைத் தாள்கள் வருவதில் காலதாமதம் இருந்து வந்தது. தற்போது முத்திரைத் தாள்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment