Islamic Widget

July 23, 2010

மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக : மீனவர்களுக்கு ரூ.4.19 லட்சம் வழங்கல்

கிள்ளை : சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் மீன் பிடி தடை கால நிவாரண நிதியாக 524 குடும்பத்தினருக்கு 800 ரூ. வீதம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் வழங் கப்பட்டது.கடலில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்களுக்கு தடை கால நிவாரணமாக கடந்த ஆண்டு 500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 300 ரூபாய் உயர்த்தி 800 ரூபாயாக வழங்க அரசு அறிவித்தது. கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 160 மீனவ குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வழங்க ஒரு கோடியே 13 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் முதற் கட்டமாக சுனாமியால் பாதிக்கப் பட்ட கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பட்டரையடி பகுதியைச் சேர்ந்த 524 குடும்பத் தினருக்கு நிவாரணம் வழங் கும் நிகழ்ச்சி கிள்ளை காளியம்மன்கோவில் சமுதாய கூடத்தில் நடந்தது.கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் இளம்பரிதி,மீன் ஆய்வாளர் நாபிராஜ், நீதிமணி, அருணகிரி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங் கேற்று பயனாளிகளுக்கு ரூபாய் 800 ஐ வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

No comments:

Post a Comment