Islamic Widget

February 13, 2016

பிரதமர் மோடி குறித்த விபரங்கள் கேட்டு மனு தாக்கல்!


புதுடெல்லி ((11-02-16): பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு அவரின் மனைவி யெசோதாபென், பாஸ்போர்ட் அலுவலகத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது தான் திருமணமானவர் என்பதனை வெளியிடவில்லை. இந்நிலையில், யெசோதாபென் என்பவர் அவருடைய மனைவி என தகவல் வெளியான போது, அதனை மோடியும் மறுக்கவில்லை. பின்னர், நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்கையில் தான் திருமணமானவர் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
சிறு வயதிலேயே தனக்கு விருப்பமில்லாமல் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்ததாகவும், அரசியலில் ஆர்வம் அதிகமிருந்ததால் திருமண பந்தத்திலிருந்து பிரிந்து வந்துவிட்டதாக மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் யெசோதாபென் பாஸ்போர்ட் எடுப்பதற்காக வேண்டி கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
அவர் விண்ணப்பத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், யெசோதாபென் தனது திருமணச் சான்றிதழையோ அல்லது மோடியை திருமணம் செய்ததற்கான இருவரும் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தையோ தாக்கல் செய்யவில்லை.
இதனால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மோடிக்கு மட்டும் எப்படி பாஸ்போர்ட் கிடைத்திருக்கும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி யெசோதாபென் ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். அந்த விண்னப்பத்தில் மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக தாக்கல் செய்த திருமணம் தொடர்பாக ஆவணங்களை வழங்கும்படி கூறினார்.
நன்றி: inneram.com

No comments:

Post a Comment