Islamic Widget

July 19, 2012

புகைப்பிடிக்கும் கணவரை விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு! சவூதி நீதிபதி அதிரடி!

ரியாத்:புகைப்பிடிக்கும் கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று சவூதி அரேபியாவின் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். சவூதி பத்திரிகையான அல் வத்வான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.கணவன்மார்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அவதியுற்ற பெண்கள் அளித்த மனுவின் மீதான விசாரணையின் இறுதியில் காழி(நீதிபதி) டாக்டர் இப்ராஹீம் குழைரி, இஸ்லாமிய ஷரீஅத்(சட்டத்திட்டம்) நிச்சயித்துள்ள(கணவனுக்கான) குறைபாடுகளில் புகைத்தலும் அடங்கும். எனவே பெண்களுக்கு புகைப்பிடித்தல் மூலம் கணவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் விவகாரத்து செய்யலாம் என தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment