Islamic Widget

June 29, 2012

பரங்கிப்பேட்டை பவர் பிளாண்டிற்கு இடைக்கால தடை: சுற்று சூழல் ஆலோசணைக்கூட்டம்



பரங்கிப்பேட்டை: கடலூர் துறைமுகம் முதல் பரங்கிப்பேட்டை வரை 9 தனியார் நிறுவனங்கள் வருகிறது. இந்த நிறுவனங்களால் பல்வேறு பாதிப்பு ஏற்படும் என்று கருதி இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் அமைக்கப்பட்டுவரும் தனியார் மின் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளில் கடுமையான சட்டவிதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது என்றும், அப்பகுதியில் சுற்றுசூழல், நிலத்தடிநீர் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளது என்றும், இதனால் கடற்கரையோரம் வாழும் மீனவ மக்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைக்கால தடை உத்தரவினால் இந்த நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து நேற்று அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய ஆலோசனை கூட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த புதுச்சத்திரத்தில் நடந்தது. இந்த ஆலோசணை கூட்டத்துக்கு சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது: "சுமார் 25 ஆயிரம் மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் வகையில் செயல்பட இருக்கும் பன்னாட்டு தொழிற்சாலைளை அகற்ற சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்வரை சந்திக்க தூதுக்குழுவை அமைத்து, அனைவரையும் சந்தித்து பிரச்னைகள் குறித்து விளக்கி கூற உள்ளோம். வருகிற ஜூலை 3,4 தேதிகளில் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று மக்களைத் திரட்டி தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஜூலை 2வது வாரத்தில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் பேராபத்தை விளக்கி புதுசத்திரத்தில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு அரசு மற்றும் காவல்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். அதன் பின்னர் அனைத்து கிராம மக்களையும் இணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதில் பரபுங்கிப்பேட்டை உள்ளிட்ட புதுக்குப்பம், , கொத் தட்டை, சின்னூர், பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் உள்பட 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். தனியார் தொழிற் சாலைகள் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 3,4-ந் தேதிகளில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும் என்று பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினார்.

கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் தொழிற் சாலைகள் வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பி.கற்பனைச்செல்வம், மாதவன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட மீன் பிடி தொழிலாளர் சங்க செயலாளர் வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் சிதம்பரம் நகர செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் மற்றும் அனைத்து கிராமத் தலைவர்கள், மீனவ சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment