பரங்கிப்பேட்டை, ஏப்ரல் 30: மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் வளைவில் தவறி விழுந்து இறந்தார். பரங்கிப்பேட்டை சலங்ககார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஜெகன்மோகன், 36; திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் கடலூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெகன்குமார் நேற்று முன்தினம் இரவு துரைசாமி நகரைச் சேர்ந்த தனது நண்பரான மதன்குமாரை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று கொண்டிருந்தார்.
அரசு கல்லூரி அருகே உள்ள வளையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள சிறுபால தடுப்புச் சுவரில் மோதி விழுந்தது. அதில் தூக்கி எரியப்பட்டதில் ஜெகன்மோகனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடன் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து மதன்குமார் கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment