
பண்ருட்டி அருகே அங்கு செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் இன்று ஒரு லாரி செங்கற்களை ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை நத்தப்பட்டை சேர்ந்த டிரைவர் சுந்தர மூர்த்தி ஓட்டிவந்தார்.
நத்தப்பட்டை சேர்ந்த தொழிலாளிகள் ஜோதி (40), முரளி, வெங்கடேசன், குப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செங்கல்லோடு மேல் அமர்ந்து வந்தனர். காலை 6 மணியளவில் அந்த லாரி நெல்லிக்குப்பம் அருகே குடிதாங்கிச்சாவடி என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை லாரி முந்த முயன்றது. அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் சுந்தரமூர்த்தி லாரியை இடது புறமாக திருப்பினார்.
இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே தள்ளு வண்டியில் புளி ஏற்றி வந்த திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த துரைராஜ் மீது மோதி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இதில் தொழி லாளர்கள் 5 பேர் மீதும் செங்கற்கள் சரிந்து இடி பாடுகளில் சிக்கி கொண்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு செங்கற்களை அகற்றி தொழிலாளிகளை மீட்டனர்.
எனினும் தொழிலாளி ஜோதி பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் இறந்துபோனார். படுகாயம் அடைந்த புளி வியாபாரி துரைராஜ், லாரி டிரைவர் சுந்தரமூர்த்தி மற்றும் தொழிலாளிகள் முரளி, வெங்கடேசன், குபுசாமி, தேவநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மீட்டு அவர்களை சிகிசைக்காக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும்நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான ஜோதியின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
No comments:
Post a Comment