Islamic Widget

February 24, 2012

வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் புது கட்டுப்பாடு

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இத்தகவலலை அந்நாட்டின் நிதியமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வெளி நாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உற்பத்தி பிரிவு நிறுவனங்கள் 65 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும் சேவை பிரிவு நிறுவனங்கள் 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும் குறைக்க வேண்டும். இந்த ஆட்குறைப்பு என்பது கட்டுமான பிரிவு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினார்.
வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்‌கப்பட்டு வருவதால் சிங்கப்பூர் நாட்டு மக்கள் பாதிப்பிற்குள்ளவாதகவும் அவர் கூறினார். வெளிநாட்டவர்கள‌ை கட்டுப்படுத்துவது என்பது கட்டுமான பிரிவு நிறுவனங்களுக்கு மட்டு‌மே தவிர பிற துறை நிறுவனங்களுக்கு அல்ல என்றும் அவர் கூறினார். நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.கட்டுமான துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பி்க்கையில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் சென்றனர். தற்போது அமைச்சரின் இந்த அறிவிப்பு வேலை தேடி செல்பவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment