Islamic Widget

February 24, 2012

ரியாத் காயல் நற்பணிமன்ற பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் பங்கேற்பு

ரியாத்வாழ் காயல்பட்டினம் நற்பணி மன்றத்தின் 43 ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 10.02.2012ல் ஹாஃப்மூன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் 2012-13 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக  ஜனாப். ஹாஜி.ஂ.ண். மின்ஹாஜ் முஹ்யித்தீன், துணைத் தலைவர்களாக ஜனாப் ஹாஜி அல்ஹாபிள்.ஂ.A.ஷைக் தாவூத் இத்ரீஸ், ஜனாப் ஹாஜி A.ஃ.முஹம்மத் நூஹு  ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளராக  ஜனாப். ஹாஜி கூஸ் ஷ்.A.ட்.முஹம்மத் அபூபக்கர், துணைச் செயலாளர்களாக ஜனாப்.ஹாஜி ஂ.ஷ்.நயீமுல்லாஹ், ஜனாப். ஹாஜி அல்ஹாஃபிள் P.ஂ.முஹம்மத் சர்ஜூன் ஆகியோரும் பொருளாளராக ஜனாப் ஹாஜி A.ட்.சூபி இப்ராஹீம் இணைப் பொருளாளராக ஜனாப்.ஹாஜி Y.A.ஷ்.ஹபீப் முஹம்மத் முஹ்சின் கணக்குத் தணிக்கையாளராக  ஜனாப்.ஹாஜி P.ஂ.ஷ்.முஹம்மத் லெப்பை காயல்பட்டணம் றஃWA பிரதிநிதிகளாக ஜனாப் ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத், ஜனாப்.ஹாஜி சோனா ஷாகுல்ஹமீத் ஆகியோரும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மனித நேயப் பணிகள் விரிவாகப் பேசப்பட்டு, மேலும் மனிதநேய அடிப்படையில் அதற்கான தொடர் ஒத்துழைப்புகளுக்கும்  கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை சுமார் 30 இலட்சம் ரூபாய்களுக்கு மேல் சமூக நற்காரியங்களில் செலவிடப்பட்டதும், அவற்றுள் சுமார் 12 இலட்சம் ரூபாய் ஏழை எளியவர்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றவே ஆனது என்பதும் விளக்கப்பட்டது.
எஸ்.டி.ஷெய்குனா ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கே.பி.செய்யித் அஹ்மத் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார். மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கேரஃபோர் என்.எம்.செய்யித் இஸ்மாயில் வரவேற்றார். நிதி நிலை அறிக்கையை மன்ற பொருளாளர் .ஜனாப் A.ட்.சூபி இப்ராகிம் சமர்ப்பித்தார். லால்பேட்டை  அப்துல்நாசர், மக்கி அஹமதுஆலிம் சாஹிப் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்புரையை  Y.A.ஷ்.ஹபீப் முஹம்மத் முஹ்சின் ஆற்றினர்.
ரியாத் வாழ் தமிழ்க் கவிஞர்கள் ஃபக்ருத்தீன் இப்னு ஹம்துன், லக்கி ஷாஜஹான் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இப்னுஹம்துன் தனது உரையில் தனது ஊரான பரங்கிப்பேட்டைக்கும் காயல்பட்டினத்திற்கும் உள்ள பொதுவான பண்பாட்டு ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு, மனிதநேயம் பற்றிய உரையையும் தனது இரு கவிதைகளையும் வாசித்தளித்தார்.
கவிஞர் லக்கி ஷாஜஹான் பேசுகையில், இந்த நற்பணிகளில் தாங்களும் இணைந்து உறுப்பினராகுவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் ஊமை விளையாட்டு (டும்ப் ச்ஹரதெஸ்) என்னும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் தமிழ்ப் பழமொழிகள், இஸ்லாமிய பொன்மொழிகளை வைத்து நடத்தினர். அனைவரையும் இந்நிகழ்ச்சி கவர்ந்தது.
ஷ்.ஷ்.மீரா சாஹிப் நன்றி தெரிவித்தார்.  விருந்து உபசரிப்புடன் விழா நிறைவெய்தியது.

No comments:

Post a Comment