இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் 2012 – 2015 ஆண்டுகளுக்கான புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.நூர் முஹம்மத். தனது நிர்வாக கமிட்டியின் பட்டியலை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதோடு அவர் தலைமையில் இயங்கும் மிக முக்கிய பொருளாதார பிரிவான “பைத்துல் மால்” கமிட்டியின் நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார்.
பரங்கிப்பேட்டையின் அனைத்து முஸ்லிம்கள், மற்றும் ஊர் சுற்றுவட்டார முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள், காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டுள்ளப்படி குறித்த நேரத்தில் நிகழ்ச்சியைத் துவங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்பதில் புதிய நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகின்றது.
இன்னும் இரண்டு நாட்களில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்க உள்ளது.
புதிய நிர்வாகத்தை வாழ்த்தும் அதே வேளையில், தூர நோக்கு சிந்தனை, அவசரமற்ற ஆரோக்யமான செயல்பாடுகள், கட்டுக் கோப்புக்கான உறுதி, சமூக அமைதிக்கான திட்டங்கள், மூன்றாண்டுகளில் சாதிக்க வேண்டியவைப் பற்றிய மேம்பாட்டுச் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை புதிய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம்.
நன்றி:pnotimes
No comments:
Post a Comment