வெடி பொருட்கள் ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமிழகக் காவல்துறை நடத்திய தீவிர வேட்டையில் மூட்டை மூட்டையாக வெடி பொருட்கள் சிக்கியுள்ளது.
இது தொடர்பான செய்தியாவது,
வேலூர் அருகேயுள்ள பகுதி சின்ன பாலபாக்கம். இந்த ஊருக்கு சட்ட விரோதமான முறையில் வெடி மருந்து பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலையொட்டி, இங்கு காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.
இச்சோதனையில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக வெடி பொருடகள் கைபற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை சோதனையிட்டதில், 350 கிலோ அலுமினியம் நைட்ரேட் மற்றும் 400 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது என்ற விபரம் தெரியவந்துள்ளது. தலைமறைவாகி விட்ட ஜெகந்நாதனை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவத்தால் வேலூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இவ்வளவு வெடி பொருட்களை பதிக்கி வைக்கப்பட்டதன் காரணம் என்ன? ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஜெகந்நாதன் கைது செய்யப்பட்டால் தான் விடை கிடைக்கும் என்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment