Islamic Widget

January 27, 2012

முஸ்லிம் பெண்கள் சுய தொழில் ஆர்வம்.

முஸ்லிம் பெண்கள் நல் வாழ்விற்காக அரசின் சிறுபான்மையினர் நல்வாழ்வுத்திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் முஸ்லிம் பெண்களுக்காக சுயதொழில் கூடம் ஒன்றை நிறுவியுள்ளது. இதற்கான பகுதி நிதியுதவி மற்ற அனைத்து உதவிகளும் கடலூர் கலெக்டர் தலைமையில் நடக்கின்றன. இது குறித்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தமது அறிக்கையில், “”பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவிகளுக்கான எல்லாவிதமான ஆடைகள் மற்றும் பள்ளி சீருடைகள் இங்கு நியாயமான கட்டணத்தில் தைத்து கொடுக்கப்படும்.
தையல் பயிற்சியில் சேர்ந்து தையல் தொழில் கற்றுக் கொள்ளவும், எம்ப்ராய்டரி பயிற்சி பெறவும் சிறந்த ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளோம். பெண்கள் பயிற்சி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் பெண்களுக்காக சிறு தொழில்களான சோப்புத்தூள், சோப்பு, அப்பளம், பினாயில், பேப்பர் பைகள் ஆகியவைகள் விரைவில் நமது சங்கத்தின் சார்பாக தொழில் தொடங்க உள்ளோம்.
ஆர்வமுள்ள ஏழைப் பெண்கள் செய்யது முஹம்மது சாயபு தெரு அலுவலத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்”". என்று குறிப்பிட்டுள்ளது.
போதிய வருமானமில்லாத, சரியான வழிகாட்டுதலில்லாத முஸ்லிம் குடும்பங்களுக்கு இத்தகைய திட்டங்களும் திட்டங்கள் சார்ந்த செயலாக்கங்களும் உறுதுணையாக இருக்கும் என நம்பலாம்.

No comments:

Post a Comment