Islamic Widget

January 27, 2012

ஜமாஅத் தேர்தல்:வாக்குரிமை இல்லாமல் போகலாம்!

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தேர்தல் எதிர் வரும் பிப்ரவரியில் நடக்கவிருப்பது உறுதியாகிவிட்ட நிலையில் தேர்தல் அலுவலர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
முதல் கட்டமாக 18 வயது நிரம்பிய ஆண்கள் உட்பட அனைத்து வாக்காளர்களின் பட்டியலும் தயார் செய்யப்படுகின்றது. தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை வைத்து இந்த தேர்தலுக்கான வாக்காளர்கள் கணக்கெடுக்கபடுகின்றனர். இது குறித்து இன்று தேர்தல் அலுவலர்கள் நோட்டிஸ் வினியோகித்துள்ளனர்.

பட்டியலில் இடம் பெறாத வாக்களர்கள் உரிய ஆவனத்துடன் வந்து தேர்தல் அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் அலுவலகம் சென்ற நாம் “பட்டியலில் பெயரில்லாதவர்கள் பெயர் சேர்க்க கொடுக்கப்பட்ட நாள் அவகாசம் மிகக் குறைவாக உள்ளது. நோட்டிஸ் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை ஏனெனில் இந்த நோட்டிஸ் மீராப்பள்ளியில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கால அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும” என்று கோரினோம்.
நாம் சொன்னதில் உள்ள நியாயத்தை புரிந்துக் கொண்டவர்கள் ஐந்து நாட்களை அதிகப்படுத்தி இந்த மாதம் 31ம் தேதி வரை, பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை இங்கு வந்து பதிவு செய்துக் கொள்ளலாம் என்றார்கள்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தேர்தலை சந்திக்கப் போகும் வாக்காளர்களின் பொறுப்பு 1) பெயர் பட்டியலில் நம் பெயர் இருக்கின்றதா.. என்று சரிபார்த்துக் கொள்வது 2 )பெயரில்லாவிட்டால் 18 வயதை அடைந்திருந்தால் அவர்கள் அரசு ஆவனங்களில் (வாக்களர் அட்டை- கேஸ் பதிவு – ரேஷன் – பேன் கார்ட் – மின் இணைப்பு காப்பி – பேங்க் அக்கவுண்ட்) போன்ற ஏதாவதொன்றைக் காண்பித்து தங்கள் பெயரை பதிவு செய்து விட வேண்டும்.
தேர்தல் நடக்கும் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் எந்த ஆவனத்தை கொண்டு வந்தாலும் அவர்கள் வாக்களிக்க முடியாது.
எனவே வாக்குரிமையைப் பெற இன்றே தயாராக வேண்டும்.

1 comment:

  1. Get registered overseas novian by email with photo identy proof attached and the local address shall be verified locally

    Name:
    DOB
    Country of ressidence:
    Phone local
    Phone overseas

    Mohamed Musthafa
    Kalima Nagar

    ReplyDelete