வடவாற்றில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வருகிறது.இதையடுத்து வீராணம் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் வரும்.இது தவிர மழை, வெள்ள காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீமுஷ் ணம்,ஆண்டிமடம்,ஜெயங் கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும்.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏரியின் நீர் மட்டம் 45.10 அடியாக இருந்தது.இதையடுத்து கோடைக் காலத்தில் விவசாயத்தை சமாளிப்பதற்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் ஏரியின் நீர் மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறை அதி காரிகள் முடிவு செய்தனர்.
500 கன அடி வரத்து
இதையடுத்து நேற்று வட வாற்றில் இருந்து வினாடிக்கு 500 கன அடிநீர் வந்தது.இதன் மூலம் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 45.30 அடியாக உயர்ந்தது. சென்னை க்கு வழக்கத்தை விட குறைவாக 21 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. விவசாய பாசனத்திற்கு 50 கன அடி நீரும், சேத்தியாத்தோப்பு பாசனத்திற்கு 80 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment