Islamic Widget

January 24, 2012

ஜமாஅத் தேர்தல் பிப். 16: அதிகாரபூர்வ அறிவிப்பு!



பிப்ரவரி 16 ஜமாஅத் தேர்தல்  பொதுக்கூட்டம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களுக்கு தடை!
உடனடி வாக்கு எண்ணிக்கை.
பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவர் தேர்வு குறித்து தேர்வு கமிட்டியா அல்லது தேர்தலா என்கிற குரல்களுக்கு மத்தியில் கடந்த வாரத்தில் தேர்தல் குறித்து ஆடிட்டர் இலியாஸ் தலைமையில் தேர்வாணையம் அமைந்தது அறிந்ததே. இந்நிலையில், ஜமாஅத் தேர்தலில் அடுத்த கட்டம் சூடு பிடித்துள்ளது.

ஜமாஅத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 16-ந்தேதி நடக்கப்போவதாக தேர்தல் ஆணையம் அதிகாரர்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுதாக்கலை பிப்ரவரி 1 முதல் 3-ந்தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், 4-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், 5-ந்தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்வைப்புத் தொகை ரூ. 3000.00 என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
 பொதுக்கூட்டம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களுக்கு தடை!
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர்க்கு பல தகுதிகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

பரங்கிப்பேட்டையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்துள்ள 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும், மொத்தம் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற்றிருந்தால் மட்டுமே முன் வைப்புத் தொகை திருப்பி தரப்படும் என்றும், வேட்பாளர்கள் பொதுக்கூட்டம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கியுடன் கூடிய ஆட்டோ விளம்பரம், தனி நபர் விமர்சனம் எதுவும் செய்தல் கூடாது, வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டலாம்.

மேலே கூறப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர்களை கண்டறிந்து ஆதாரத்துடன் நிருபித்தால் அவர்களை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீக்கம் செய்திடும் அதிகாரம் தேர்தல் அலுவலர்களுக்கு உண்டு என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் கேட்டதற்கு, 'வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அடுத்த மணி நேரத்தில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறினார்.
நன்றி:mypno

No comments:

Post a Comment