Islamic Widget

December 09, 2011

இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்!

ஹைதராபாத் : மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில்கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞ்சர்களுக்கு ஆந்திர அரசு 70 லட்சம் ரூபாய் நஷ்ட்ட ஈடாக வழங்க உத்தரவு பிரபித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இந்த  70 இலட்சம் ரூபாயும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை கயவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 
கடந்த 2007  ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ஹைதராபாத் ஜும்மா தொழுகை நடைபெற்ற சமயத்தில் மக்கா மஸ்ஜிதில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பல உயிர்கள் பலியாயின.

மேலும் இக்குண்டு வெடிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 70  பேரை காவல்துறை கைதுசெய்து அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் சென்ற வருடம் இந்தியா முழுவதும் நடந்த தொடர்  குண்டு வெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிருபிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அடைந்த துன்பத்திற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் தான் பாவமன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். காந்தியும் புத்தரும் பிறந்த குஜராத்தில் பயங்கரவாதி  மோடியின் பாசிசம் ஆட்சி செய்கிறது. அதே நேரம் ஆந்திரத்தில் இருந்து ஒரு வசந்த காற்று வீசுகிறது அதுதான் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இவர் நீதியன் காவலனாக, நேர்மையின் சின்னமாக உயர்ந்து விளங்குகிறார். இவர்தான் இந்தியாவின் ஜென்டில் மென். இவரை போன்றவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவில் மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இதுபோன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? பாபர் மசூதி மீண்டும் கட்டி கொடுக்கப்படுமா? ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபாலன், உமாபாரதி போன்றோர் தண்டிக்கப்படுவார்களா? இது நடக்குமேயானால் மீண்டும் ஒரு பிரிவினையில் இருந்து இந்தியா தப்பிக்கும். இந்தியா வல்லரசாக தேவையில்லை தனது குடிமக்களுக்கு நல்லரசாக இருந்தால் போதும்.

No comments:

Post a Comment