Islamic Widget

October 27, 2011

தமிழகத்தில் தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், நெல்லை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவாட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.




தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறந்து விடப்படுவது நேற்று காலை 10 மணிமுதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியுள்ளது.

No comments:

Post a Comment