குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் குஜராத் மாநில காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.தம்முடன் பணிபுரியும் காவல்துறை அதிகாரியிடம் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு சஞ்சீவ் பட் நிர்பந்தப் படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளதாக சஞ்சீவ் பட்டின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002 ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் கொல்லப் பட்டப் போது முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலவரக் காரர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்ததாக சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
கைது செய்யப் பட்டுள்ள சஞ்சீவ் பட் குஜராத் அரசால் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment