Islamic Widget

October 28, 2011

அத்வானிக்கு எதிராக சுவரொட்டிகள்: நெல்லையில் பரபரப்பு!

நெல்லையில் அத்வானியின் ரத யாத்திரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று அவருடைய ரத யாத்திரை மதுரை வந்தடைந்தது. நாளை(28-ம்தேதி) காலை தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்குச் செல்கிறார்.
இதற்கிடையில், இன்று அத்வானியின் ரதயாத்திரை மதுரை வருவதை முன்னிட்டு, அவருடைய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில்,
"ஊழல் விழிப்புணர்வு யாருக்குத் தேவை? எடியூரப்பாவுக்கா? ஊழல் ரதமே திரும்பி போ" இவண் அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜங்ஷன், டவுன், பாளை பகுதிகளில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சுவரொட்டிகள் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment