நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பா.ம.க. ம.தி.மு.க, கம்யுனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை அழைத்து, தி.மு.க, அ.தி.மு.க, அல்லாத கூட்டணிக்கு யாரேனும் தலைமை ஏற்று உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கலாம், என தான் அழைத்ததாகவும் அதற்கு எந்தக் கட்சியும் முன் வராததால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திராவிட கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்ததால், கூட்டணி கட்சிகளுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலைச் சந்திக்கும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பா.ம.க. ம.தி.மு.க, கம்யுனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை அழைத்து, தி.மு.க, அ.தி.மு.க, அல்லாத கூட்டணிக்கு யாரேனும் தலைமை ஏற்று உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கலாம், என தான் அழைத்ததாகவும் அதற்கு எந்தக் கட்சியும் முன் வராததால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்
No comments:
Post a Comment