Islamic Widget

March 29, 2011

கடலூரில் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம்

கடலூர் : அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று கடலூர் மற்றும் புவனகிரி பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.அ.தி.மு.க., கூட்டணி சார்பில் அ.தி.மு.க., காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, கடலூர், நெய்வேலி ஆகிய 5 தொகுதிகளிலும், தே.மு.தி.க., பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளிலும், சிதம்பரம் தொகுதியில் மா.கம்யூ., கட்சியினரும் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்கிறார்.
புவனகிரிக்கு இன்று மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டரில் வரும் ஜெயலலிதா அங்கு வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார்.பின்னர் மீண்டும் ஹெலிகாப்படர் மூலம் கடலூர் வருகை தரும் ஜெயலலிதா, அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹெலிபேடில் இறங்கி அங்கிருந்து பிரசார வேன் மூலம் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு வருகிறார். அங்கு வேனிலிருந்தபடி பிரசாரம் செய்கிறார்.இதைத் தொடர்ந்து வேன் மூலம் புதுச்சேரி செல்லும், அவர் வழியில் ரெட்டிச்சாவடியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.ஜெயலலிதா வருகைக்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அ.தி.மு.க.,வினர் பிரமாண்ட பந்தல் அமைத்துள்ளனர்.பந்தலின் கீழ் வேனில் பிரசாரம் மேற்கொள்ளும் போது வேட்பாளர் நிற்க தனியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.பிரசார பந்தல் அருகே ஆயுதம் தாங்கிய போலீசார் மட்டுமின்றி மேலும் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பந்தல் அமைக்கும் பணியை கட்சியின் அமைப்புச் செயலர் செங்கேட்டையன் நேற்று அதிகாலை 2 மணியளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தை பார்வையிட்டு மாவட்டச் செயலர் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிளுடன் பாதுகாப்பு, ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

Source: Dinamalar

No comments:

Post a Comment