Islamic Widget

March 09, 2011

சிப்காட் கெமிக்கல் கம்பெனிக்கு சீல்மேலாளர் மீது வழக்குப் பதிவு

கடலூர்:தனியார் கம்பெனியில் காஸ் கசிவு சம்பவத்தில் மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கம்பெனிக்கு சீல் வைத்தனர்.கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சாஷன் கெமிக்கல்ஸ் கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஹைட்ரோ புரோமின் காஸ் இருந்த சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டது.
இதனால் குடிகாட்டைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு திடீர் மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 83 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிலர் குடும்பத்துடன் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.குடிகாடு மற்றும் ஈச்சங்காடு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கம்பெனியை மூடக்கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனைத் தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் சாஷன் கெமிக்கல்ஸ் முதன்மை மேலாளர் ஜெயமுருகப்பிரகாஷ் மீது 284 (அசாதாரணமாகவும், அஜாக்கிரதையாகவும்) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர்.


கம்பெனிக்கு சீல்: மாசுகட்டுப்பாட்டு அதிகாரி ராஜா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து ஹைட்ரோ புரோமின் கெமிக்கலை பரிசோதனைக்காக மாதிரி எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் தங்கராஜ் சாஷன் கெமிக்கல் கம்பெனி சுற்றுச்சூழலுக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஆபத்து தரக்கூடிய கெமிக்கலை பயன்படுத்தியதால் மறு உத்தரவு வரும் வரை கம்பெனி மூடப்படுகிறது என நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தார்.அமைச்சர் ஆறுதல்: தகவல் அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., சேர்மன் தங்கராசு உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Source: Dinamalar


No comments:

Post a Comment