Islamic Widget

March 08, 2011

கடலூரில் பரபரப்பு:ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு; 66 பேர் வாந்தி-மயக்கம்; ஆஸ்பத்திரியில் சிகிச்சை

கடலூர்: சிப்காட் பகுதியில் தனியார் (சாசன்) ரசாயன தொழிற்சாலை உள்ளது. வழக்கம் போல் நேற்று நள்ளிரவில் இயங்கி கொண்டிருந்த இந்த ஆலையில் இருந்து திடீரென விஷவாயு கசிந்தது. உடனே தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
காற்றில் விஷ வாயு பரவியதால் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விபரீதத்தை உணர்ந்த அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.எனினும் விஷவாயு தாக்கியதால் 66 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.இதனைக் கண்டு பதறிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அந்த ஆஸ்பத்திரிகளில் கூட்டம் ஆலைமோதியது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு சரமாரி கல்வீச்சு நடத்தினர்.இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைய செய்தனர். விஷவாயு ஆலை உடனடியாக மூடப்பட்டது.
கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஷ்வின் கோட்னிஷ் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிப்காட் ரசாயன ஆலை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நன்றி: மாலைமலர்

No comments:

Post a Comment