Islamic Widget

January 19, 2011

கூட்டுறவு வங்கிகளில் வெள்ள நிவாரணத்தை விவசாயிகள் பெறலாம்; கடலூர் கலெக்டர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை 2010-ல் முழுமையாக சேதமடைந்த 940 குடிசைகளுக்கும் தலா ரூ.5000/- வீதம் ரூ.47 லட்சமும் பகுதி சேதமடைந்த 11719 குடிசைகளுக்கு தலா ரூ.2500/- வீதம் ரூ.2.93 கோடியும், மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீடுகளில் இதுவரை 45,343 வீடுகளுக்கு தலா ரூ.1500/- வீதம் ரூ.6.80 கோடியும், சேதமுற்ற 4,440 நெசவாளர் தறி வீடுகளுக்கு தலா ரூ.1500/- வீதம் ரூ.66.60 லட்சமும் ஆக மொத்தம் 62,442 வீடுகளுக்கு ரூ.10.87 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த 23156,80.00 ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணமாக இதுவரை ரூ.15.66 கோடியும் சேதமடைந்த 2999,26.0 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.2.25 கோடியும் ஆக ரூ.17.91 கோடி நிவாரணத் தொகை மாவட்டத்திலுள்ள 142 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டு சுமார் 50,000 விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையினை சம்பந்தப் பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.



இவ்வாறு அவர் கூறியுள் ளார்

No comments:

Post a Comment