Islamic Widget

January 19, 2011

பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு!

இஸ்லாமாபாத்: . பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஈரான், ஆப்கானிஸ்தானை யொட்டியுள்ள மலைகளடர்ந்த பாலைவனப்பகுதியில் அதிகாலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 7.4 ரிக்டராக பதிவாகி உள்ளது.


பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலி டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவிலும் எதிரொலித்ததால் மக்கள் பீதியடைந்தனர். ஈரான், ஆப்கானிஸ்தானை யொட்டியுள்ள பாலைவனப்பகுதியில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 7.4 ரிக்டராக இருந்தது
பூமிக்குக் கீழே 84 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவான தகவல்கள் எதுவும் வரவில்லை. இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் வட இந்தியாப்பகுதிகளான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர்.டெல்லியில் பல பகுதிகளில் வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், பார்மர், கங்காநகர், ஜெய்சால்மர் ஆகிய நகரங்களில் நில அதிர்ச்சி காணப்பட்டது. துபாயிலும் கூட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் 7.6. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

 
source: inneram

No comments:

Post a Comment