பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மீனவர்களுக்கு மீன் பிடித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
 பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம், முடசல் ஓடை கிராமங்களில் தேசிய மீன் வளர்ச்சி வாரியம் மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மீனவர்களுக்கு மதிப்பிடக்கூடிய மீன் பொருட்கள் தயாரித்தல், ஜி.பி.எஸ்., கருவி இயக்குதல், இன்ஜின் பழுது நீக்குதல் மற்றும் சுகாதாரமான முறையில் மீன் பிடித்தல், கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் இளங்கோவன் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் கிராம வள மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்விழி பேசுகையில், தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சிகள் குறித்தும், குறும்படத்தின் மூலம் மீனவர்களுக்கு சுகாதாரமான முறையில் மீன்களை பிடித்தல் மற்றும் கையாளுதல் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மீன் வளத்துறை மேற்பார்வையாளர் ராமலிங்கம், மணிகண்டன், கனகவள்ளி, வீரராஜ் பங்கேற்றனர்.
Source:dinamalar
January 04, 2011
பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு மீன்பிடித்தல் திறன் மேம்பாடு பயிற்சி
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
 - நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
 - குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
 - இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
 - அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
 - ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
 - நஷ்டவாளர்கள் யார்?
 - ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
 - நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்
 - முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்! அமெரிக்கா
 
No comments:
Post a Comment