Islamic Widget

December 07, 2010

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம்?

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண நிதி அளிப்பது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக மழை நிவாரணம் வழங்கும் விதமாக, இன்று முக்கிய முடிவுகளை முதல்வர் எடுக்க உள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படும், என்றும் மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்குவது என்பது குறித்தும் முடிவு எடுக்கபடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மழை வெள்ளச் சேத விபரங்களை மதிப்பிட தமிழக அரசு, உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி, வெள்ள சேதங்களை பார்வையிட்டனர், இந்த குழு, இன்று சென்னையில் தமிழக அரசிடம் ம்ழை வெள்ள அறிக்கையை தாக்கல் செய்கிறது. அந்த அறிக்கையின் படி வெள்ள நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

Source:.inneram

No comments:

Post a Comment