Islamic Widget

November 27, 2010

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பாதிப்பு

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடலூரில் வெள்ளிக்கிழமை 2-வது நாளாக, 500 பெரிய படகுகள் மற்றும் 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகள் அனைத்தும், மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடல் கொந்தழிப்பு அதிகமாக இருப்பதாகவும், கடல் நீரோட்டம் மீன்பிடித் தொழிலுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ள, 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் அங்காடிகளில் மீன்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.
கிலோ ரூ.100 விலையில் விற்பனை செய்யப்பட்ட, சாதாரண ரக மீன்கள் விலை ரூ.120 ஆகவும், வஞ்சரம் போன்ற மீன்களின் விலை ரூ.300 ஆகவும் உயர்ந்துள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் வரத்தொடங்கி உள்ளன.


Source:dinamani photos:pno.news

No comments:

Post a Comment