வடகிழக்கு பருவக் காற்றால் கடலூர் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் கனமழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மழையளவு:
திங்கள்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் உள்ள லக்கூரில் 17.6 செ.மீ., விருத்தாசலத்தில் 17.3 செ.மீ., தொழுதூரில் 11.5 செ.மீ., குப்பநத்தத்தில் 10.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
மற்ற பகுதிகளில் பதிவாகி உள்ள மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:
பெலாந்துரை 74மேமாத்தூர் 68கொத்தவாச்சேரி 67வேப்பூர் 62காட்டுமயிலூர் 56காட்டுமன்னார்கோயில் 54லால்பேட்டை 53புவனகிரி 42கீழ்ச்செறுவாய் 41கடலூர் 39பண்ருட்டி 30ஸ்ரீமுஷ்ணம் 30சேத்தியாத்தோப்பு 28வானமாதேவி 27சிதம்பரம் 21அண்ணாமலை நகர் 12பரங்கிப்பேட்டை 12மாவட்டத்தில் சராசரியாக 61 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான ஏரிகளும் நிரம்பி வருகின்றன. வெலிங்டன் ஏரி நீர்மட்டம் திங்கள்கிழமை 11.5 அடியாக இருந்தது (மொத்த உயரம் 32 அடி). மற்ற ஏரிகளில் நீர்மட்டம் (மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்): பெருமாள் ஏரி 5.2 அடி (6 அடி). வாலாஜா 5 அடி (5.5 அடி).
10-ல் ஆலோசனைக் கூட்டம்:
மழை திருப்திகரமாக இருப்பதையொட்டி, வெள்ளாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி, கோமுகி அணை, மணிமுத்தாறு அணை ஆகியவற்றின் நீர்ப்பாசனப் பிரச்னைகள் குறித்த, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், விருத்தாசலத்தில் 10-ம் தேதி நடைபெற இருப்பதாக வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் தெரிவித்தார்.
Source: Dinamani. photos: pno.news
November 02, 2010
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- ஹதீஸில் பிரார்த்தனைகள்
No comments:
Post a Comment