வாஷிங்டன்: காஷ்மீரில் கலவரத்தை உண்டு பண்ணவும், காஷ்மீர் விடுதலைக்காவும் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தி, பயிற்சி யளித்து அனுப்பி வைத்தோம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பினோம் என்று முதல் முறையாக ஒரு பாகி்ஸதான் தலைவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முஷாரப் ஜெர்மனி பத்திரிக்கை டெர் ஸ்பீகலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
காஷ்மீரில் நடந்து வரும் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அங்குள்ள மக்களுக்கு உதவியாகவும் ரகசியமாக போராளிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பி வத்தோம். அங்கு போராடி வரும் பெரும்பாலானோர் இங்கு (பாகிஸ்தானில்) பயிற்சி பெற்றவர்கள்தான்.
காஷ்மீர் விவகாரத்தில் நவாஸ்ஷெரீப் முதுகெலும்பு இல்லாதவராக இருந்தார். இதனால்தான் நாங்கள் (அப்போது ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தார் முஷாரப்) ரகசியமாக போராளிகளை உருவாக்கி அனுப்பி வைக்க நேரிட்டது. மேலும், காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து உலகமும் கண்களை மூடியபடி இருந்ததால் நாங்களே அதில் தலையிட நேர்ந்தது.
தனது சக இனத்தவர்கள் உரிமைக்காக போராடி வரும்போது அதே இனத்தைச் சேர்ந்தவர்கள், உதவுவது உலக இயல்புதானே என்று கூறியுள்ளார் முஷாரப்.
தற்போது இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார் முஷாரப். சமீபத்தில்தான் அனைத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியையும் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம்.
Source: thatstamil
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச்செய்தி
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment