லண்டன் : லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த சவுதி இளவரசர், தனது உதவியாளரை கடுமையாக தாக்கியது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த உதவியாளர் இறந்துவிட்டார். சவுதி அரேபிய மன்னரின் சகோதரரின் பேரன் அப்துல் அஜிஸ் பின் நாசர்(34). இவர் கடந்த பிப்ரவரி மாதம், லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். இவருடைய உதவியாளரும் இவரது அறையில் தங்கியிருந்தார். ஆனால், பிப்ரவரி 15ம்தேதி உதவியாளர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உதவியாளரின் கன்னத்தில் காயம் இருந்தது. எனவே, இந்த கொலை பாலியல் தொடர்பானதாக இருக்கலாம்,
என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்தது தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது, என முதலில் மறுத்திருந்தார் அப்துல் அஜிஸ். ஓட்டல் படிகட்டில் தனது உதவியாளரை சவுதி இளவரசர் கடுமையாக தாக்கியது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. உதவியாளரை தாக்கியதை ஒப்புக்கொண்ட இளவரசர் இந்த கொலையை செய்யவில்லை, என மறுப்பு தெரிவித்துள்ளார்.
Source: Dinamalar
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச்செய்தி
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment