பரங்கிப்பேட்டை ஒன்றிய தெற்கு பகுதியில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடு வளர்ப்போர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கைக்கான பணி நடக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக துவங்க உள்ள ஆடு வளர்ப்போர் நல வாரியத்தில் உறுப்பினர் களாக சேர்ந்து பயன்பெற 5 ஆடுகளுக்கும் குறையாமல் வளர்ப்பவர்கள் உரிய விதிமுறைகளுடன் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கிள்ளை பேரூராட்சி, தில்லைவிடங்கன்,
மடுவங்கரை, நஞ்சைமகத்துவாழ்க்கை, பின்னத்தூர், நக்கரவந் தன்குடி, கணக்கரப்பட்டு, குமாரமங்கலம், கீழ்அனுவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வி.ஏ.ஓ.,விடமிருந்து சான்று மூலம் விண்ணப்பிக்கும் பணி நடக்கிறது.
Source: Dinamalar
No comments:
Post a Comment